Publisher | Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 208 |
Product ID | 9788193580622 |
தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை - அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் "ஆயிரம் ஆண்டு அதிசயம்" என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில் நுட்பம், நாட்டியக் கலையில் ராஜராஜசோழன் காட்டிய அளப்பரிய அக்கறை; கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருந்த தேவாரப் பாடல்களைக் கண்டறிந்து, இன்றளவும் இறை சன்னிதானத்தில் ஒலிக்கச் செய்த பெருமை போன்ற புதைந்து கிடந்த புதையல் செய்திகளை ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரைப் போலவும், சரித்திர பேராசிரியரைப் போலவும் ஆராய்ந்து ஆசிரியர் அமுதன் தமிழ் கூறும் நல் உலகத்திற்கு வழங்கியுள்ளார்.
"தினத்தந்தி" ஞாயிறு மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர். இப்போது, அழகிய வண்ணப் படங்களுடன் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது.