Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 192 |
Product ID | 9788184764079 |
குடும்ப அட்டை முதல் குடியிருக்கும் வீடு வரை எதுவாக இருந்தாலும் அதற்குரிய உரிமங்களைக் கொடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ளது அரசுதான். ஓய்வூதியம் பெறுவதற்குகூட ஓய்வின்றி அலைய வேண்டி உள்ளது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து சாமானிய மக்கள் மீள்வதற்கான மருந்துதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு வரமாக கிடைத்துள்ள வாய்ப்பு இது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கும், அரசு நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்குமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருமே தகவல் பெறும் உரிமை உடையவராவர் என்பதை ஆணித்தரமாக புரிய வைக்கிறது இந்த நூல். பொதுமக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து எளிமையாகவும் உண்மை சம்பவங்களின் உதாரணங்களோடும் இந்த நூலின் ஆசிரியர் பரக்கத் அலி எழுதியிருக்கிறார். இந்தச் சட்டத்தின் வலிமை, குறைகள், நிறைகள், மேல்முறையீடு, மனு போடுவதற்கான கட்டண விபரம் மற்றும் செலுத்தும் விதம், எந்தெந்த துறைகளுக்கு பொருந்தும், பொருந்தாது, எவ்வளவு நாட்களில் பதில் கிடைத்துவிடும் என்பது போன்ற நிறைய பயன் உள்ள தகவல்களைக்கொண்ட இந்த நூல் கடைக்கோடி பாமரனுக்கும் நிச்சயம் கைகொடுக்கும்!