Publisher | Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 192 |
Product ID | 9788193663370 |
குற்ற வழக்குகளில் துப்பு துலக்கியது எப்படி? என்பதை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பெ.கண்ணப்பன், "புரட்டிப்போடும் புலன்விசாரணை" என்ற தலைப்பில் தினத்தந்தி வெள்ளிமலரில் எழுதி வந்தார். இது இப்போது நூலாக வெளிவந்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புகள், பத்திரிகையில் வெளியான செய்திகள், போலீஸ் நிலைய ஆவணங்களில் இடம் பெற்ற தகவல்களைக் கொண்டு அவரது பணிக்காலத்தில் நிகழ்ந்த குற்ற வழக்குகள் சிலவற்றில் மேற்கொண்ட புலன் விசாரணையைச் சுவைபட விளக்குகிறார்.
கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல், திருட்டு போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் துப்பு துலக்கிய விதத்தை விறுவிறுப்பான நடையில் விவரித்துள்ளார்.
குற்றவாளிகளைக் கண்டறிய விரல் ரேகைகள் எப்படி துணை புரிகின்றன? குற்றச் செயல்களில் துப்பு துலக்க கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன்கள் எப்படி உதவுகின்றன என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விளக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஒரு டாக்டர், அவருடைய மனைவி, காவலாளி ஆகிய மூவரைக் கொன்ற வழக்கில், திறமையாகத் துப்பு துலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது; ஆதாயக் கொலை வழக்கில், கணவன் மனைவியைக் கொலை செய்ததைக் கண்டறிந்தது - தமிழக போலீசாரின் துப்பறியும் சாதனைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
பக்கத்துக்குப் பக்கம் ஒரு திகில் கதையைப் படிப்பது போன்ற உணர்வே, இந்நூலைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகிறது.