| Publisher | The Hindu Tamil KSL Media Limited [தி ஹிந்து தமிழ்] |
| Product Format | Hardcover |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 496 |
| Product ID | 9788199155640 |
புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகக் காப்பாட்சியராகப் பணியாற்றிய ஜெ.ராஜாமுகமது எழுதிய ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற இந்நூல், அம்மாவட்ட மக்களுக்கும், தமிழகத்தின் ஆய்வாளர்களுக்கும் கிடைத்த பெரும் கொடை என்றே சொல்ல வேண்டும். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி இவர், புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்திருப்பது இந்நூலுக்கு சிறப்பு சேர்த்துள்ளது. இம்மாவட்டம் சங்க காலத்தில் பெற்றிருந்த சிறப்பு விவரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் கி.மு.200 முதல் கி.பி.200 வரை வழக்கிலிருந்ததாகக் கருதப்படும் பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்திருப்பதன் மூலம் இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுச் செழுமையைப் பற்றி நூலாசிரியர் பேசுகிறார்.
