Publisher | Kalachuvadu Pathipagam [காலச்சுவடு பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 270 |
Product ID | 9789355230232 |
1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி. வேலூர்க் கோட்டை. ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது. பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர். கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது. 1806இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை, வேலூர்க் கலகம், வேலூர் எழுச்சி, வேலூர்க் கிளர்ச்சி, வேலூர்ப் புரட்சி எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர்.