Publisher | Ezhuthu [எழுத்து] |
Product Format | Hardcover |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 424 |
Product ID | 8190425476 |
ஜெயமோகனின் புதிய நாவல் வெள்ளையானை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.
ஒரு பஞ்சம் எங்கிருந்து தொடங்குகிறது?. வறண்ட நிலத்தில் இருந்து? பொய்த்த வானத்தில் இருந்து? ஏமாற்றிய பருவநிலையில் இருந்து? இல்லை உண்மையில் பஞ்சம் அன்பற்ற ஒரு நெஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட நீதியைப் பற்றி முகத்தில் அறைந்து சொல்கிறது. இந்த நாவல் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்களுள் ஒன்று.