Publisher | Aruna Publications |
Product Format | Hardcover |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 784 |
Product ID | 9789390989348 |
ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்
பாடிய மாணிக்கவாசகப் பெருமானுக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் மதுரைச்
சொக்கநாதப் பெருமான் திருவிளையாடல்கள் நிகழ்த்திக் காட்டிய தலம் மதுரை.
விழவுமலி மூதூரான இம்மதுரையை விரும்பி, அம்மையும் அப்பனும் -
அங்கயற்கண்ணியம்மை, சொக்கநாதப் பெருமானாக வீற்றிருந்து - அறுபத்து நான்கு
திருவிளையாடல்களையும் யுகம் யுகமாக நடத்தியருளிய புனிதத் தலம் இம்மதுரை.
தொல்பழங்காலத்திலிருந்தே திருவிளையாடல் செய்திகள் மக்களால் பேசப்
பெற்றும், புலவர்களால் இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதப் பெற்றும் வந்த நிலையில்
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் அறுபத்து நான்கு
திருவிளையாடல்களையும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்று
பாடியுள்ளார். மதுரையைப் பற்றித் தமிழில் எழுந்த முதல் தலபுராணம் இதுவே ஆகும்.
இந்நூல் வெளிவந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னரே பரஞ்சோதி முனிவர் எழுதிய
திருவிளையாடற் புராணம் வெளிவந்துள்ளது.