Publisher | Golden Book[கோல்டன் புக் பப்ளிகேஷன்ஸ் ] |
Product Format | Hardcover |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 856 |
Product ID | RMB285414 |
மகா மகத்துவம் பொருந்திய ஸ்ரீ போகர் மகரிஷி திருவாய் மலர்ந்தருளிய சப்தகாண்டம் 7000 நூலின் பொருளுரை மட்டும் , போகர், போக மாமுனிவர் (Bogar, Boyang Wei) என்பவர் பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. [1][2] இவர் வைகாவூர் (பழனி) எனும் ஊரில் பிறந்தார். இவர் தனது தாய் மற்றும் தனது தாத்தாவிடமும் கல்வியை கற்றார் என்று கூறப்படுகிறது.[3] இவர் நவசித்தர்களுள் ஒருவரான காளங்கி நாதர் என்பவரது சீடராக அறியப்படுகிறார். போகரின் சீடர்கள் பலர் இருப்பினும் குறிப்பிடும்படியாக புலிப்பாணி என்னும் சித்தர் அறியப்படுகிறார். சீனாவில் போகர் போயாங் வேய் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழிலும், சீன மொழியிலும் இயற்றியுள்ள நூல்களின் வாயிலாக சித்த மருத்துவம், விஞ்ஞானம், இரசவாதம், காயகற்ப முறை, யோகாசனம் போன்ற எண்ணற்ற குறிப்புகளும், அறிவியல் ரீதியலான கண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் அடைவதற்கான வழிமுறைகளும் நமக்கு கிடைக்கப்பெருகின்றன. உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவர் திருவுருவச்சிலையை நவபாடாணங்களை கொண்டு போகர் வடிவமைத்தார் என்று நம்பப்படுகிறது.