Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | -- |
Product ID | RMB02381 |
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும் களப்பிரர்களும், சாளுக்கியர்களும் தங்களுக்குள் சமராடுவதில் மட்டும் எப்போதும் சளைத்ததில்லை. அப்படிப்பட்ட பல சமர்க் களங்கள் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் வரலாற்றில் பதிவான ஒரு போர்தான் உறையூர் போர். கண்ணிமைப் பொழுதில் உறையூரில் நடந்தேறிய ஒரு சம்பவம், சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட ஒரு போரின் துவக்கமானது.அப்படி, கண்ணிமைப்பொழுதில் துவங்கிவிட்ட போர், ஒருநாள் பொழுதில் முடிவுக்கும் வந்துவிட்டது என்றாலும், தமிழகத்தின் பிற்கால சரித்திரத்தையே புரட்டிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன், உறையூரின் மீது போர் தொடுத்தபோது, சிவனையே போற்றி, சிந்தை முழுதும் சிவனையே ஏற்றிய சோழ மன்னன் மணிமுடிச் சோழனும், அவன் மகள் மானியும் அதை எப்படி எதிர்கொண்டார்கள், போரின் முடிவில் என்ன நிகழ்ந்தது என்பனவற்றை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கூறுகிறது இந்த சிவமகுடம். சக்தி விகடனில் தொடராக வெளிவந்தபோது, பெரும்பாலோரால் பெரிதும் பாராட்டப்பட்ட சிவமகுடம், இப்போது வரலாற்று நூலாகியிருக்கிறது. ஆன்மிகமும் வரலாறும் கைகோத்துப் பயணிக்கிறது இந்த வரலாற்றுப் பாதையில்! சிவமகுடத்தில் ஒளிவீசும் வரலாற்றைத் தரிசிக்க வாருங்கள்...