| Publisher | Sree Indhu Publications |
| Product Format | Hardcover |
| Language Published | Tamil |
| Volume Number | 1 |
| Number of Pages | 1216 |
| Product ID | RMB287046 |
தொண்டர்சீர் பரவும் தொழுதகு நூலாம் பெரியபுராணம் தமிழின் தனி அடையாளம். பிறமொழிச் சார்போ, பிற தேசச் சார்போ இன்றித் தமிழ்மொழியில், தமிழகச் சூழலில் தோன்றிய மூலப் பெருங்காப்பியம் இது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைப் பக்திச் சுவையுடனும் பைந்தமிழ்ச் சுவையுடனும் எடுத்துரைக்கின்ற ஈடற்ற படைப்பாக இந்நூலைச் சேக்கிழார் பெருமானார் வழங்கியிருக்கிறார். நாயன்மார்களின் கதைகளைப் பொதுவாகப் பலரும் அறிந்திருக்கவே செய்வார்கள். ஆனால், அவற்றைச் சேக்கிழாரின் தெய்வத்தமிழ்ப் பாக்களின் வழியாக அறிவது, கதையனுபவத்தையும் கடவுளனுபவத்தையும் கடலளவாய்ப் பெருகச் செய்கிறது என்று கற்றறிந்தார் கண்டு கூறுகிறார்கள். ஆதலால், இந்நூலைப் பாட்டும் உரையும் அடங்கிய பதிப்பாக வெளியிடுகிறோம். இந்தப் பன்னிரண்டாம் திருமுறை உங்களைப் பரவசப்படுத்தும்!
