Publisher | Matangi Foundation |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 102 |
Product ID | 9789356070646 |
நீங்கள் செல்வந்தராக வேண்டுமா?
இந்த கேள்விக்கு நம் அனைவரின் ஏகோபித்த பதிலும் "ஆம்!" என்பதாகவே இருக்கும். மாற்றாக பதிலளிப்பவர்கள் அரிது. செல்வந்தராக வேண்டும், இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி நினைத்த வாழ்வை வாழவேண்டும் என்கிற தீரா ஆசை எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் கைகூடுவதேன்? ஏன் மற்றவர்களால் இதை நிகழ்த்த முடிவதில்லை!
உண்மையில் செல்வந்தராவது உலகின் அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியம்! அதற்குத் தேவையானது ஒன்றேதான். செல்வத்தை பற்றிய இயற்கை விதிகளின் சரியான புரிதல்!
இவ்வுலகிலுள்ள அனைவருக்கும் இந்த புரிதல் கிடைத்திடவேண்டும் என்ற நோக்கில் செல்வத்தின் ஞானம் அனைத்தும் மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இந்த புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதவாக்கு! இயற்கை பேருண்மைகள்!.
செல்வத்தை பற்றிய நம் பாரத மஹான்களுடைய புரிதல்களின் ஒட்டுமொத்த சாரம். இதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரே ஒரு விஷயத்தை ஒருவர் சிரம்மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவார் எனில் அவர் வாழ்வில் செல்வம் தவறாமல் வாசம் செய்யும் என்பதே "பணவாசத்தின்" வாக்குறுதி.
உங்களைத் தேடி வரும் செல்வத்தை திறந்த மனதுடன் வரவேற்கத் தயாராகுங்கள்! வாழ்த்துக்கள்!
~ குரு மித்ரேஷிவா