Publisher | Vijaya Pathippagam [விஜயா பதிப்பகம்] |
Product Format | Hardcover |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 672 |
Product ID | 9788184469101 |
சமகால “தந்த்ர” மார்க்கத்தின் உச்ச குரு (Greatest Tantric of this age) என்று ஓஷோவால் குறிப்பிடப்பட்ட “ஜார்ஜ் இவானோவிட்ச் குர்ட்ஜிப்” ருஷ்யப் பேரரசின் ஆக்கிரமிப்பிற்குக் கீழ் இருந்த அர்மீனியாவில் பிறந்தவர்.
குர்ட்ஜிப் பள்ளிப் பருவம் முதலே தன்னுடைய இருப்பின் மெய்யர்த்தத்தைத் குறித்த கேள்விகளைக் கொண்டிருந்தார். அதே சமயம் அவருடைய தந்தையான யானிஸ் அவர்கள் குர்ட்ஜிப் எவ்வித சமய விடைகளிலும் தேங்கி நின்றுவிடாதவாறு உயிர்ப்புடன் வளர்த்தார்.
குர்ட்ஜிப்பின் பதினாறாம் வயதில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான மரண அனுபவமும் பயமும் அவருடைய தேடலை மேலும் உசுப்பிவிட்டு வாழ்வின் ‘உச்ச உண்மை’ அல்லது மெய்ஞானத்தை நோக்கி விசையோடு தள்ளியது.
அதன்பின் ஒருவித தீவிரத் தன்மையோடு தன்னுடைய இருப்பின் ரகசியத்தை தேடத் தொடங்கினார் குர்ட்ஜிப்.
உலகமெங்கிலும் குழப்பங்களும், போர்ப் பதற்றங்களும், பஞ்சங்களும், பசியும், பட்டினியும் நிலவிய காலம் அது. ஆனால் இவை எதுவுமே குர்ட்ஜிப்பின் தேடலையும் , உச்ச உண்மையை அறியும் வேட்கையையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
அவர் ஓயாமல் அதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.
கொடூரமான இனக்கலவரங்கள், போர்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடுவே வாழ நேர்ந்தாலும் பல வித ஆபத்துக்களினூடே அதி தீவிரப் பயணியாகச் சுற்றியலைந்த குர்ட்ஜிப், பல்வேறு உலக ஞான மார்க்கங்களை கற்றறிந்து, அதிலிருந்து முற்றிலும் புதிய வழிகளை, பயிற்சிகளை சுயமாக உருவாக்கி, மெய்த் தேடல் கொண்டவர்களுக்கு அளித்தார்.
பிரான்ஸின், பாரீசிற்கு அருகே வனம் சூழ்ந்த ‘பௌண்டன்ப்லோ’ (Fontainebleau) எனுமிடத்தில் தன்னுடைய ஞானப் பயிற்சிப் பள்ளியை (School of Mysticism) நிறுவிய குர்ட்ஜிப் 1949 ம் வருடம் தன்னுடைய 83ம் வயதில் உயிர் நீத்தார்.
இன்றும் உலகம் முழுவதிலும் அவரால் வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளையும் , பாடங்களையும் நுட்பமான சாதனா முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கப்படுகிறது.
வெளிப்படையாகவும், ரகசியமாகவும் இன்றளவும் அவரால் மற்றும் அவரது மாணவர்களால் நிறுவப்பட்ட ஞானப் பள்ளிகளில் தொடர்ந்து அவருடைய ‘குர்ட்ஜிப் புனித அசைவுகள்’ (Gurdjieff Sacred Movements) என்றழைக்கப்படும் நடன முறைகள் பயின்று பார்க்கப்படுகிறது.