கரையெல்லாம் செண்பகப்பூ’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன்.அங்கு ஒரு பழைய ஜமீன் மாளிகையில் தங்குகிறான். கிராமத்துப் பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் வள்ளி விரும்புவது அவள் மாமன் மருதமுத்துவை.அந்த மருதமுத்துவை சலனப்படுத்த வந்து சேருகிறாள் நகரத்து நாகரிகப் பெண் சினேகலதா. ஜமீன் வம்சத்து வாரிசாக வருபவள் கல்யாணராமனுடன் அதே ஜமீன் மாளிகையில் தங்குகிறாள். அவள் வந்த பிறகு ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் கல்யாணராமனை பயமுறுத்துகின்றன. உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது. கிராமத்து சூழ்நிலையே தடம் புரண்டு சிக்கலாகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.