An online book store
Use App for a better experience
banner

Ilakkiyathil Inbarasam [ இலக்கியத்தில் இன்பரசம் ]

Author: Dina Thanthi Editorial Baord
icon

Rs. 114.00 + Shipping Charges

Price: Rs. 120.00 5% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்]
Product Format --
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 160
Product ID 9788193298619

இலக்கியம் என்றவுடன் பயந்துவிட வேண்டாம். எல்லோரும் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது, இந்த புத்தகம். அதில் இருந்து சில இனிய காட்சிகள்.

   காதல் வயப்படுகிறவர்களுக்கு முதலில் தொலைந்து போவது, தூக்கம்தான். காதலியை நினைத்து ஒரு இளைஞன் இரவெல்லாம் தவிக்கிறான்.

     அவளை தேடிச்சென்று கட்டித் தழுவ நினைக்கிறான். இயலவில்லை. அவன், “மீன் உறங்கும் நேரம்கூட கண் உறங்கவில்லை” யாம்! ஒரு காதலன் தவிப்புக்கு எவ்வளவு அற்புதமான உவமை! ஒரு புதுப்பெண், கட்டித் தயிரை கையால் பிசைகிறாள். பின் கையை புடவையில் துடைத்துக் கொள்கிறாள்.

     அந்த புடவையை துவைக்காமல் அழுக்காக உடுத்தி இருக்கிறாள். சமையலறை தாளிசப் புகையால் அவளது கண்கள் கலங்கிப் போய் இருக்கின்றன. தட்டுத்தடுமாறி தானே சமைத்த புளிப்பான குழம்பை அவள், கணவனுக்கு பரிமாற, “ஆகா! இனிதாக இருக்கிறது!” அவன் பாராட்ட, அவளோ வெட்கத்தால் முகம் நாணுகிறாளாம்! இது, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழனின் இல்லத்தில் நடந்த இனிமையான சமையலறைக் காட்சி. காடு, மலை கடந்து சென்று பொன், பொருள் ஈட்ட நினைக்கிறான், ஒரு இளைஞன். அப்போது அவனுடைய இளம் மனைவி, குழந்தையுடன் குறுக்கே வருகிறாள். மனைவியின் அழகையும், மகன் தத்தி நடந்து விளையாடும் எழிலையும் காணும்போது அவனது மனம் மாறுகிறது. இந்த அழகு மனைவியையும், மகனையும் விடவா, அந்த பொன்னும், பொருளும் பெரிது? காதல் கடலிலும் பெரிது! என்று மனைவியையும், மகனையும் அரவணைத்துக் கொள்கிறான். இப்படி ஒரு பழந்தமிழனின் இனிக்கும் இல்லறக் காட்சி. இதுபோன்று சங்க இலக்கியத்தில் குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களின் சுவைகளை சாறு பிழிந்து தருகிறார், ஆசிரியர் க.முத்துநாயகம். காதலர்கள் மட்டும் அல்ல; தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக தமிழை முதற்பாடமாக எடுத்துப் படிக்கின்ற மாணவர்களின் கைகளில் இருக்க வேண்டிய புத்தகம்,