Publisher | Kannadasan Pathippagam [கண்ணதாசன் பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 168 |
Product ID | 9788184021554 |
உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார். அகஸ்ட் ரோடின் என்னும் கலைஞரிடம் சிற்பமும் ஓவியமும் பயின்று அத்துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். (குறிப்பு: ஆங்கிலத்தில் Kahlil Gibran என்று எழுதப்படும் பெயரைத் தமிழில் ஜிப்ரான் என்று சிலரும் கிப்ரான் என்று சிலரும் எழுதுகிறார்கள். ஜிப்ரான் என்பதே சரி. மூல மொழியான அரபியில் அப்பெயருக்கு அரபு எழுத்து முறையின் ஐந்தாம் எழுத்தாகிய “ஜீம்” என்னும் எழுத்தே இடப்படுகிறது. எனவே அரபி லிபியில் அது ஜிப்ரான் என்றே உச்சரிக்கப்படும். அதுவே சரி.