Publisher | Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 63 |
Product ID | RMB284320 |
எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நான் உடலல்ல. நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு.”
“ஒரு மனிதன் தியான நிலையில் இருந்தால் அந்த மனிதனுக்கு துன்பம் என்பதே இருக்காது. தியானநிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் போக்குகள் அவரைத் தொடாமல் அவரது வாழ்வில் அவர் விரும்பியதைச் செய்யலாம்.”
“நீங்கள் மண்ணைப் பக்குவப்படுத்தி தேவையான நீரையும் உரத்தையும் அளித்து சரியான விதையை விதைத்தால், விதை வளர்ந்து மலர்களையும் பழங்களையும் வழங்கும். நீங்கள் ஆசைப்பட்டதால் மரத்தில் மலர்களும் பழங்களும் வரவில்லை. தேவையான சூழலை உருவாக்கியதால் மட்டுமே வருகின்றன. அதேபோல் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றைக் கொண்ட ‘‘நீங்கள்’’ என்ற தன்மையின் நான்கு பரிமாணங்களுக்கும் தேவைப்படும் சூழலை உங்களுக்குள் உருவாக்கினால் தியானம் என்பது இயல்பாகவே உங்களுக்குள் மலரும்.”