Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 247 |
Product ID | 9788184767476 |
சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும். சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்!