Publisher | Daily Thanthi Pathippagam [தினத்தந்தி பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 224 |
Product ID | 9788193580653 |
உயிர் வாழ உணவு அவசியம். அதுவும் ஆரோக்கியமான உணவே ஆயுளை அதிகரிக்கும். அந்த வகையில்தான் நம் முன்னோர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார்கள்.
திருவள்ளுவர் மருந்து என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டாலும், அந்த அதிகாரத்தில் உணவின் முக்கியத்துவம், உணவைச் சாப்பிடும் அளவு, சாப்பிடும் முறை என்று உணவுக்கே முக்கியம் இடத்தைத் தருகிறார்.
நாம் இப்போது உடலுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய சிறு தானியங்களையும், அரிசி வகைகளையும், மூலிகை, காய்கறி, கீரை வகைகளையும் மறந்து பயன் தராத உணவு வகைகளை உண்டு வருகிறோம்.
இதனால் ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறோம். இந்த நூலில் டாக்டர் இரா.பத்மப்ரியா, காய்கள், கனிகள், கீரைகளில் இருக்கும் மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கிறார்.
பப்பாளிக் காய் உணவு தொடங்கி சதகுப்பை வரையிலான 54 உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்ற செய்முறைகளையும் சொல்லித் தருகிறார். உடல் நலத்தில் அக்கறை கொண்ட அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்.