An online book store
Use App for a better experience
banner

Anbudan Ramesh - Vetrikkana Eliya Vithigal - [அன்புடன் ரமேஷ் - வெற்றிக்கான எளிய விதிகள்]

Author: K.Nallatambi[கே.நல்லதம்பி]
icon

Rs. 225.00 + Shipping Charges

Price: Rs. 250.00 10% Offer
In stock.
v
Check delivery option
Availability

Publisher Sawanna Publications
Product Format Paper Back
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 207
Product ID 9789393224309

ரமேஷ்‌ அரவிந்த்‌ என்கிற யதார்த்தக் கலைஞனின் ‌எழுத்திலிருந்து வெளிப்படும்‌ அனுபவத் ‌தெறிப்புகளை, வெற்றி பெற வேண்டும் ‌எனத்‌ துடிக்கும்‌ அடுத்த தலைமுறை இளைஞனுக்குத்‌ தேவையான வழிகாட்டும் ‌குறிப்புகளாகக்‌ கொள்ளலாம்‌. தன் ‌வாழ்க்கைக் ‌குறிப்புகளை மிகச் ‌சுருக்கமாகத் ‌தந்துள்ளார்‌. அது அடர்ந்த இருளுக்குள்‌ அகப்பட்டுக்‌ கொண்டிருக்கும் ‌எத்தனையோ பேருக்கு நம்பிக்கைக்‌ கீற்றை நல்கிச் ‌செல்கிறது. தன்னடக்கமும்‌, தன்னம்பிக்கையும் ‌இந்நூல்‌ வெளியெங்கும்‌ விரவிக்‌ கிடக்கின்றன. - கவிஞர்‌ தமிழச்சி தங்கபாண்டியன். -00000- அருமையான தலைப்பு இந்தப் புத்தகத்திற்கு. நண்பர் ரமேஷை அன்பு என்ற அணிகலன் இல்லாமல் இதுவரை நான் கண்டதில்லை. அன்புடன் அறிவும் தெளிவும் சேர்ந்த போது அடைக்கும் தாழ் உண்டோ? சினிமாக் கலைஞனைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களை உடைத்து எறிகிறது இவருடைய எழுத்துச் சரளமும் அனுபவப் பரிமாற்றமும்.இளையர்களுக்கு மட்டுமல்லாது கற்கும் வேட்கை உள்ள அனைத்து சாராருக்கும் இது நல்ல வாசிப்பு என்பது என் கணிப்பு. - சுஹாஸினி, திரைக்கலைஞர். -00000- வெற்றிக்கான எளிய விதிகளை எளிமையான மொழியில் சொல்லியிருக்கும் ரமேஷ் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார். Ôசிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உங்கள் வேலையை நீங்கள் கச்சிதமாகச் செய்ய வேண்டும். கோலம் போடும் போது ஒவ்வொரு புள்ளியாக வைத்துக்கொண்டு போவார்கள். அது கோலம் என்று தோன்றுவது கடைசியில். அங்கே பல நூறு புள்ளிகள் இணைந்திருக்கும்Õ. பல்லாயிரம் புள்ளிகளை இணைத்து இந்த புத்தகத்தில் ஒரு பெரிய கோலம் போட்டிருக்கிறார் ரமேஷ். - சுகா, எழுத்தாளர்