Publisher | Isha Yoga Trust [ஈஷா யோகா அறக்கட்டளை] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 36 |
Product ID | RMB284350 |
புத்தகத்திலிருந்து சில துளிகள்…
“நீங்கள் ஒரு குழந்தையாயிருந்தபோது அமைதியும் ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள். எப்போதாவது, யாராவது, உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாராவது உங்களை ஆனந்தப்படுத்த வேண்டி இருக்கிறது.”
“உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்துபோய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் அனைவரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ, கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள் தான்.”
“அமைதியில்லாத நிலை உங்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் இருப்பதில்லை தான். ஆனால் ஒரு நாளில் ஏற்படுகிற ஐந்து நிமிடப் பதட்டம் கூட உங்கள் வாழ்வைப் பாழ்படுத்தி விடக்கூடும். எனவே வெளியில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்கவேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.”
“அப்படி முடிவு செய்கிற நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் வெளிச்சூழலில் நிகழ்கிற எதுவும் உங்களை பாதிக்காது. ஒன்று கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நீங்கள் விரும்பியது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும், நீங்கள் அமைதியாக, ஆனந்தமாக வாழ்வீர்கள்.”