An online book store
Use App for a better experience
banner

Vetri Kodi Kattu [வெற்றிக்கொடிகட்டு]

Author: Nagore Rumi [நாகூர் ரூமி]
icon

Rs. 114.00 + Shipping Charges

Price: Rs. 120.00 5% Offer
Out of stock.
Bell

when the product become available

Frequently bought together

Publisher Sixthsense Publications [சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்]
Product Format Paper Pack
Language Published Tamil
Volume Number 1
Number of Pages 120
Product ID 9789372577751

முனைவர் நாகூர்ரூமி தனது 25 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவத்தால் தலைமுறைகள், பாடத்திட்டங்கள்,இவற்றைத்தாண்டி சிந்திக்கக்கூடியவர் .ஒரு மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறும்பொழுது கடமைகள் அவனைத்துரத்துவது போலவே , எதிர்காலக் கனவுகளும் அவனைத் தடுமாறச் செய்கின்றன .அவன் நிதர்சனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இலக்கிலிருந்து அவனை வெகுதூரத்திற்கு விலகிச்செல்ல வைத்துவிடுகின்றன என்பதை நன்கு உணர்ந்தவர் ரூமி.அதனால் இளைஞர்களுக்கும் அவர்களை வழிநடத்திச்செல்லும் நிலையிலுள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு பிரச்சனையை சமாளிப்பது என்பது வேறு, அதற்கு தீர்வுகாண்பது என்பது வேறு. உதாரணமாக சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கஷ்டமாக இருந்தால் அவசரத்தேவைக்கு அமிர்த்தாஞ்சனை பயன்படுத்துவதைப் போல ரெபிடெக்சை வைத்து சமாளிக்கலாம். ஆனால் சுயமாக ஆங்கிலத்திலேயே சிந்திக்க வேண்டுமென்றால்?மன்னிக்கவும், இந்த சேவைக்கான வசதி தங்களிடம் இல்லை என்று அடிமனதிலிருந்து ஒரு குரல் ஒலிக்கும் . அது ஆழ்மனதில் உங்களை அறியாமலேயே பதிவான ஒரு வாய்ப்பாடு. ஒருவர் படித்து வளர்ந்த சூழலும்,அவரைப் பாதித்த சம்பவங்களும்தான் இதற்குக் காரணம். ஒருவருடைய ஆழ்மனதில்அடிக்கப்பட்ட ஆணியை அகற்ற முடியுமா? தன்னைத் தானே ஒருவரால் புடம் போட்டுக்கொள்ள முடியுமா? என்றால், முடியும் என்பதே இந்தப் புத்தகம் தரும் பதில்.விளையும் பயிர் முளையிலேயே தெரியும். நம் வாழ்க்கையை சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் நம் வாழ்விற்கான வித்து ஒரு சிறிய பாராட்டிலோ, பெரிய பேரிழப்பிலோ பொதிந்திருந்தது தெரியும். ஒரு திறன் வெளிப்படுவதற்கான விசை எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை க்ரஹித்துக்கொள்ளும் விழிப்புணர்வோடு ஒருவர் இருந்தால் விரும்பியதெல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்கிறார் நாகூர் ரூமி. எழுதிய நூல்கள்: Alpha Meditation - An Introduction வெற்றிக்கொடிகட்டு திராட்சைகளின் இதயம்