Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 256 |
Product ID | 9788189936488 |
உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பதே உலக சினிமா. எங்கோ, யாருக்கோ அல்லது இங்கே நமக்கு என்கிற சுவர்களை உடைத்து ஒவ்வொரு இதயத்துக்கும் நம்பிக்கையை, அன்பை, ஒளியைப் பாய்ச்சுவதே படைப்பின் பெருங்கனவு! செய்தி உலகின் உன்னதத் திரைப்படங்களைப் பற்றி பேசுவதே இந்த நூல். ஒவ்வொரு சினிமாவைப் பற்றியும் தனக்கான பறவைமொழியுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். ஆனந்த விகடனின் வெற்றித் தொடர்களில் ஒன்றான உலக சினிமாவை எழுத்தால் செதுக்கிய செழியனின் பங்களிப்பை சினிமா உலகம் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கும். இது வெறும் தொடராக மட்டுமே நின்றுவிடாமல் தொகுப்பாக வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாசகர்களும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதால் இந்தக் கட்டுரைகள் நூலாக வெளியிடப்படுகின்றன.