Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 320 |
Product ID | 9788184764550 |
உடலை இதமாக்கும் காற்று, மனதை லேசாக்கும் பேரமைதி, நீர்க்கோடுகளாக பாறைகளைத் தழுவி விழும் அருவிகள் என உற்சாகம் தரும் அழகு ஒரு புறம் நம்மை வரவேற்க... உலகின் ஆரோக்கியத்துக்கு எனப் பிறப்பெடுத்த மூலிகை வளங்கள், காய்கள், கனிகள், அரிய வகை விலங்குகள், வண்ண வண்ணப் பூச்சிகள் என பிரமிக்கவைக்கும் இயற்கைச் செல்வங்கள் ஒரு புறம் நம்மை உற்சாகப்படுத்த... தென்றல் தோன்றும் இடமான, உலகின் தலையாய மலையான பொதிகை மலை நம்மை அழைக்கிறது! ஆம்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பொதிகை மலைக்குச் சென்றுவர வேண்டும் என கனவு கண்டுகொண்டு இருப்பவர்களை வரவேற்கக் காத்திருக்கிறார், அந்த மலையில் தவம் புரியும் மாமுனிவர் அகத்தியச் சித்தர்! ஆதிகாலத்தில் தீக்கங்குகளாக இருந்த இந்த உலகம், முதன் முதலில் குளிர்ந்து, சாம்பல் பூத்து, மண் தோன்றி, கல்தோன்றி, தாவரங்களோடு செந்தமிழும் தோன்றிய இடம், சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! தென்றல் காற்றில் இசையைக் கற்ற, நீர்வீழ்ச்சிகளின் தாலாட்டில் நடனத்தைக் கற்ற, மரங்களின் அசைவில் பேசக் கற்ற பழங்குடிகள் வாழும் பொதிகை மலையைப் பற்றியும், அங்கு அகத்தியப் பெருமான் ஆட்சி செய்யும் அழகைப் பற்றியும் அழகான ஏறு நடையில், அற்புதமான யாத்திரை மொழியில் வர்ணித்து எழுதி இருக்கிறார், நூல் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. பழந்தமிழ்க்குடி மக்களான காணிகள் வாழும் சோலை வனம், பாணதீர்த்தம், யானை மிரட்டல், அட்டைக்கடி, குளிர் மேகத் தாலாட்டு, வழுக்குப் பாறை, சித்தர்களின் வாழ்க்கை ரகசியம், அகத்தியருக்குப் பூஜை செய்வது, அவரது அருள்பெற்று கண்ணீர் சொரிவது வரை அவ்வளவு காட்சிகளும் மனதைவிட்டு அகலாத பதிவுகள். மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து, பொதிகை மலைக்கு யாத்திரை செல்லத் தூண்டும் காட்சிகள்! இந்த நூலைப் படித்தால், பூலோக கைலாயத்துக்குச் சென்றுவந்த திருப்தியும், சந்தோஷமும் நிச்சயமாகக் கிடைக்கும்!