Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 144 |
Product ID | 9789388104159 |
தமிழ்நாட்டில் இப்போது அனைத்துத் துறைகளிலும் நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு முதல் சிறுதானிய சமையல் வரை அது நீள்கிறது. வெளிநாட்டு உணவு வகைகளிலும் பளீர் வெண்மை அரிசியிலும் மயங்கி அசிடிட்டி போன்ற பிரச்னைகளில் சிக்கிய தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சென்னை போன்ற நகர மக்கள் சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் நிலை விரைந்து பரவி வருவது வரவேற்கத்தக்கது. ‘நோய்நாடி நோய் முதல்நாடி' என்றான் வள்ளுவன். நோய்க்கான முதல் காரணமே நாம் உண்ணும் உணவுதான். புறச்சூழல்கள் எப்படியிருந்தாலும் நாம் உண்ணும் உணவு சரியானதாக இருந்தால் ஆரோக்கியத்துக்கு என்றும் ஏற்படாது ஆபத்து. சிறுதானிய உணவுகளில் ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்தரவாதம் உண்டு. சிறுதானியங்களால் மூன்று வேளை உணவு வகைகள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற வகையில் மாலை நேர சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பானங்கள் என எல்லாவற்றையும் செய்யலாம் என்கிறார் இந்த நூலாசிரியர் கலைவாணி. சிறுதானியத்தைக்கொண்டு புதுவித சுவையில் கோலா உருண்டை, பஜ்ஜி, மஞ்சூரியன், ஸ்வீட்ஸ், சாலட்ஸ் என பல வகை ருசியான உணவுகளைச் சமைத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை அப்டேட் செய்துகொள்ளுங்கள்!