Publisher | Kizhakku Pathippagam [கிழக்கு பதிப்பகம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 600 |
Product ID | 9788184935011 |
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது. துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு, முழுமையான மிகை புனைவு, புராணப்புனைவு, சமூகச் சித்திரிப்பு, கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள், வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.வடிவத்தை, மொழிநடையை, கருப்பொருளை மாற்றியபடி, தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன்.ஜெயமோகன்