Publisher | Vikatan Prasuram [விகடன் பிரசுரம்] |
Product Format | Paper Back |
Language Published | Tamil |
Volume Number | -- |
Number of Pages | 200 |
Product ID | 9788184761825 |
பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அதன் பயன்பாடுகள் பற்றியும் இந